துருக்கியில் நிகழ்ந்த விமான விபத்து – லிபியா இராணுவ உயரதிகாரி உயிரிழப்பு
துருக்கியில் ஏற்பட்ட விமான விபத்தில் லிபியாவின் முக்கிய இராணுவ அதிகாரியான முகமது அலி அகமது அல் ஹதாத் உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கி தலைநகரமான அங்காராவிலிருந்து, லிபிய இராணுவ தளபதி முகமது அலி அகமது அல் ஹதாத் உள்ளிட்டோர் தனியார் ஜெட் விமானம் மூலம் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
விமானம் புறப்பட்டு சுமார் 40 நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பை இழந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவசர தரையிறக்கம் செய்ய முயன்றபோது ஏற்பட்ட தொழில்நுட்ப பழுது காரணமாக விமானம் கீழே விழுந்து சிதைந்தது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த லிபிய இராணுவ தளபதி முகமது அலி அகமது அல் ஹதாத் உட்பட ஏழு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.