ஏர் இந்தியா விமானியை எதிர்த்து வழக்கு பதிவு
டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் பயணியை தாக்கியதாக ஏர் இந்தியா விமானி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, அங்கித் திவான் என்ற பயணியை விமானி வீரேந்தர் செஜ்வால் தாக்கியார். பாதிக்கப்பட்ட பயணி ரத்தம் வழிந்த நிலையில் இருந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார்.
இதன்பின் மத்திய அமைச்சக உத்தரவின் பேரில், வீரேந்தர் செஜ்வாலின் ஏர் இந்தியா பணியை இடைநிறுத்தியது.
தற்போது, விமானி வீரேந்தர் செஜ்வாலுக்கு எதிராக 3 பிரிவுகளில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.