எப்ஸ்டீன் புகைப்படங்களில் வெளியான அரச குடும்ப நெருக்கங்கள் – அதிர்ச்சி தகவல்
பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் புகைப்படம் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் புகைப்படங்களின் தொகுப்பில், முன்னாள் பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூவின் தனிப்பட்ட புகைப்படங்களும் அடங்கியுள்ளன.
அமெரிக்க நாடாளுமன்றம் கொண்டு வந்த Epstein Files Transparency Act சட்டத்தின் படி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆயிரக்கணக்கான ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு இணையதளத்தில் பதிவேற்றப்பட்டன. ஆனால், பதிவேற்றிய மறுநாளே, 16க்கும் மேற்பட்ட ஆவணங்கள் முன் எச்சரிப்பின்றி நீக்கப்பட்டன.
இந்த ஆவணங்களில் முக்கியமானது ‘File 468’. இதில் டொனால்ட் ட்ரம்ப், மெலனியா டிரம்ப், ஜெப்ரி எப்ஸ்டீன் மற்றும் கிஸ்லைன் மேக்ஸ்வெல் ஒரே புகைப்படத்தில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ட்ரம்ப் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் பிகினி உடையில் இளம்பெண்களுடன் இருப்பதாகவும், மற்றொரு புகைப்படம் இருந்தது.
பதிவேற்றம் செய்யப்பட்ட 24 மணிநேரத்திற்குள் இந்தப் புகைப்படங்கள் நீக்கப்படுவதால் பரபரப்பான சர்ச்சி எழுந்தது. அமெரிக்க செனட் தலைவர் சக் ஷுமர், 119 பக்கங்கள் கொண்ட ஒரு ஆவணத்தின் முழுமையான மறைவு மிகப்பெரிய வழக்கு என விமர்சித்தார். ஹவுஸ் ஓவர்சைட் கமிட்டியும் (House Oversight Committee) கண்டனம் தெரிவித்தது.
நீதித்துறையின் நடவடிக்கைக்கு ஜனநாயகக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் உள்ளிட்ட பல பிரபலங்கள் உள்ள ஆவணங்களில், ட்ரம்பின் புகைப்படம் மட்டும் நீக்கப்பட்டதால் அரசியல் ரீதியான கோந்தளிப்பு ஏற்பட்டது.
அமெரிக்க துணை வழக்கறிஞர் டாட் பிளான்ச், அதிபர் சார்பில் நீக்கம் நடைபெறவில்லை; பாதிக்கப்பட்டோர் கோரிக்கையின் பேரில் 16 புகைப்படங்கள் நீக்கப்பட்டதுதான் எனத் தெரிவித்தார். பின்னர் நீக்கப்பட்ட ட்ரம்பின் புகைப்படம் மீட்கப்பட்டது, பாதிப்புக்குள்ளவர்களை பொதுமக்களிடம் அவமரியாதை செய்யாத விதமாக.
மேலும், ஆண்ட்ரூவின் புகைப்படங்கள் சாண்ட்ரிங்ஹாம் ஓய்விடத்தில் எடுக்கப்பட்டவை. இதில் அவர் உடையணிந்து, ஐந்து பெண்களைச் சுற்றியிருந்தார்; அருகில் கிஸ்லைன் மேக்ஸ்வெல் நிற்கும் புகைப்படம் அரச குடும்பத்துடனான எப்ஸ்டீனின் நெருக்கத்தை வெளிப்படுத்துகிறது.
புகைப்படம் 2000 டிசம்பர் மாத இறுதியில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே ஆண்டு மேக்ஸ்வெல் 39வது பிறந்தநாளும் கொண்டாடப்பட்டது. ஜூன் 2000-ல் ஆஸ்காட்டில் நடந்த ராயல் பாக்ஸ் லேடீஸ் டே விழாவில் ஆண்ட்ரூ, எப்ஸ்டீன் மற்றும் மேக்ஸ்வெல் ஒரே புகைப்படத்தில் இருந்தனர். இங்கிலாந்து ராணி மற்றும் அவரது தாய் விழாவில் கலந்து கொண்டதைச் சாட்சியமாகக் கொண்டு, அரச குடும்பத்துடன் எப்ஸ்டீன் மற்றும் மேக்ஸ்வெலின் தொடர்பும் வெளிப்படுத்தப்பட்டது.
மேலும், புல்வெளி பகுதிகளில், 10 டவுனிங் தெருவுக்கு வெளியே மற்றும் பக்கிங்ஹாம் அரண்மனையில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களும் ஆண்ட்ரூவின் எப்ஸ்டீன் தொடர்பை உறுதிப்படுத்துகின்றன. 2010-ல் ஆண்ட்ரூ எப்ஸ்டீனுடன் தொடர்பை மறுத்ததாக கூறியிருந்தாலும், புகைப்படங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் அவரது தொடர்பை உறுதிப்படுத்தியுள்ளன.
ஜெப்ரி எப்ஸ்டீன் சம்பந்தமான ரகசிய ஆவணங்களில் இன்னும் வெளியிடப்படவுள்ள அதிர்ச்சிகர தகவல்கள் தொடர்பான எதிர்பார்ப்புகள் உள்ளன.