அமெரிக்காவுடன் வணிக உடன்படிக்கை பேச்சுகள் முடிவை நோக்கி
அமெரிக்க நாட்டுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் வணிக உடன்படிக்கைக்கான கலந்துரையாடல்கள் தற்போது நிறைவுக்கட்டத்தை அடைந்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.
இந்தியா – நியூசிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனை குறிப்பிட்டார்.
‘ஐந்து கண்கள்’ கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகளுடன் இந்தியா ஏற்கனவே தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாகவும், அதேபோல் அமெரிக்காவுடனான வணிக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, கனடா நாட்டுடன் விரைவில் புதிய பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட உள்ளதாகவும், இது உலக அரசியல் மற்றும் பொருளாதார மேடையில் இந்தியாவின் முக்கியத்துவம் தொடர்ந்து உயர்ந்து வருவதை வெளிப்படுத்துகிறது என்றும் பியூஷ் கோயல் கூறினார்.