ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து – நான்காம் நாள் விழா கோலாகலம்

Date:

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து – நான்காம் நாள் விழா கோலாகலம்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள புகழ்பெற்ற அரங்கநாதர் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெறும் பகல் பத்து திருவிழா கடந்த 20ஆம் தேதி சிறப்பாக தொடங்கியது.

இந்த உற்சவத்தின் ஒரு பகுதியாக, நான்காம் நாளில் நம்பெருமாள் விசேட அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கல்லால் அலங்கரிக்கப்பட்ட அரைக் கொண்டை சாற்றியும், தங்கம் மற்றும் வைரங்களால் செய்யப்பட்ட ஆபரணங்களை அணிந்தும், நம்பெருமாள் அர்ஜீன மண்டபத்தில் எழுந்தருளினார்.

நாள்தோறும் நடைபெறும் உற்சவங்களில், நம்பெருமாளுக்கு அழகிய அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீப ஆராதனை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், நான்காம் நாள் நிகழ்விலும் நம்பெருமாளுக்கு சிறப்பான மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்தத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, நம்பெருமாளை தரிசித்து ஆன்மிக இன்பம் பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“ஓ.பன்னீர்செல்வம் திமுகவில்: அரசியல் திருப்பமா? அதிகாரப் பரவலா?” விரிவான தகவல்

ஓ.பன்னீர்செல்வம் திமுகவில்: அரசியல் திருப்பமா? அதிகாரப் பரவலா? பிப்ரவரி 27, 2026 -...

செயல்பாட்டில் இல்லாத சேவை மையங்கள்: வீடியோ வெளியிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு திமுகவினர் மிரட்டல்!

செயல்பாட்டில் இல்லாத சேவை மையங்கள்: வீடியோ வெளியிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு திமுகவினர் மிரட்டல்! கடலூர்...

“1500 ஆண்டுகள் பழமையான கோயிலைப் புறக்கணிப்பதா?” – அறநிலையத் துறைக்கு எதிராக இந்து முன்னணி போர்க்கொடி!

"1500 ஆண்டுகள் பழமையான கோயிலைப் புறக்கணிப்பதா?" - அறநிலையத் துறைக்கு எதிராக...

வரலாறு படைத்த குடியரசுத் தலைவர்: உள்நாட்டு ‘பிரசந்த்’ போர் ஹெலிகாப்டரில் திரெளபதி முர்மு பயணம்!

வரலாறு படைத்த குடியரசுத் தலைவர்: உள்நாட்டு 'பிரசந்த்' போர் ஹெலிகாப்டரில் திரெளபதி...