தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,400 குறைந்தது; வெள்ளி விலையும் சரிவு
சென்னையில் இன்று (அக்டோபர் 22) தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அளவு சரிவு ஏற்பட்டுள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2,400 குறைந்துள்ளது.
சமீபத்தில், அமெரிக்கா எச்-1பி விசா கட்டணத்தை உயர்த்தியதும், டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததும், மேலும் அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததும்கூட முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் திரும்பச்செய்தது. இதன் விளைவாக தங்கம் விலை தொடர்ந்து உயர்வடைந்திருந்தது.
ஆனால், இன்று தங்கம் விலையில் திடீர் சரிவு பதிவாகி நகைப்பிரியர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது. அதன்படி, 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.300 குறைந்து ரூ.11,700-ஆகவும், பவுனுக்கு ரூ.2,400 குறைந்து ரூ.93,600-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.2 குறைந்து ரூ.180-ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,80,000-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.