கடை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற சமந்தாவை சூழ்ந்த ரசிகர்கள்!
தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற நகைக்கடை தொடக்க விழாவில் கலந்துகொண்ட நடிகை சமந்தா, ரசிகர்கள் திரளில் சிக்கிக்கொண்டார்.
நகைக்கடை திறப்பு விழாவில் சமந்தா பங்கேற்கிறார் என்ற தகவல் பரவியதைத் தொடர்ந்து, அவரை நேரில் காண பெருந்திரளான ரசிகர்கள் அந்த இடத்தில் கூடியனர்.
அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் முனைந்ததால், கூட்ட நெரிசலில் சமந்தா சிக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டவர்கள் உடனடியாக தலையிட்டு, சமந்தாவை பாதுகாப்பாக மீட்டு காரில் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.