விண்வெளி வரலாற்றில் புதிய சாதனை – மிக்கேலா பெந்தாஸ்
தனது விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற உதவிய அனைவருக்கும் என்றும் நன்றிக்கடன் பட்டிருப்பேன் என ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மிக்கேலா பெந்தாஸ் தெரிவித்துள்ளார்.
12 வயதில் ஏற்பட்ட விபத்தினால் முதுகெலும்பில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு, அதன் பின்னர் சக்கர நாற்காலியை பயன்படுத்தி வரும் மிக்கேலா பெந்தாஸ், இன்று விண்வெளி வரலாற்றில் முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளார்.
அமெரிக்க தொழிலதிபர் ஜெஃப் பெசோஸ் நிறுவிய ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட்–28 விண்வெளி பயணத்தின் மூலம் அவர் விண்வெளிக்கு சென்று பாதுகாப்பாக திரும்பியுள்ளார்.
இந்த சாதனை, மாற்றுத் திறனாளிகளுக்கும் விண்வெளி கனவுகள் எட்டாக்கனவல்ல என்பதை உலகுக்கு உணர்த்தியதாக பார்க்கப்படுகிறது.