உக்ரைனை முழுமையாக கைப்பற்றும் ஆற்றல் ரஷ்யாவுக்கு இல்லை
உக்ரைனை முழுவதுமாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் திறன் ரஷ்யாவுக்கு இல்லை என அமெரிக்காவின் உளவுத்துறை தலைமை இயக்குநர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான மோதல் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போரின் பின்னணியில், டோனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோரிஜ்ஜியா ஆகிய உக்ரைனின் நான்கு பகுதிகளை தாங்கள் கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ரஷ்யா போரைத் தொடங்க உள்ளதாக வெளிவந்த தகவல்களுக்கு பதிலளித்த துளசி கப்பார்ட், அந்தவகையான தாக்குதல் நடத்தும் வாய்ப்பு நடைமுறையில் சாத்தியமற்றது எனத் தெரிவித்துள்ளார்.