அமெரிக்காவில் 90 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலம் வெடிவைத்து அகற்றப்பட்டது
அமெரிக்காவின் அயோவா மாநிலத்தில், நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்த ஒரு பழமையான பாலம் திட்டமிட்ட முறையில் வெடிவைத்து அகற்றப்பட்டது.
அயோவா மாநிலத்தின் லான்சிங் நகரப் பகுதியில், மிசிசிப்பி நதியின் மேல் அமைந்திருந்த ‘பிளாக் ஹாக்’ பாலம் 1931ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இரும்புத் தளங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பாலம், பல தசாப்தங்களாக வாகனப் போக்குவரத்துக்கு சேவை செய்து வந்தது.
புதிய பாலம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், பழைய பாலத்தை பாதுகாப்பான முறையில் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்காக முன்கூட்டியே பொருத்தப்பட்ட வெடிமருந்துகள் மூலம், மிகத் துல்லியமாக பாலம் இடிக்கப்பட்டது.
இந்த வெடி நடவடிக்கை எந்தவித பாதிப்பும் இன்றி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.