வின்டர் வொண்டர்லேண்ட் 2025 விழா உற்சாகம்
இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் நடைபெறும் வின்டர் வொண்டர்லேண்ட் 2025 விழா, பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்துமஸ் மற்றும் குளிர்காலத்தை வரவேற்கும் வகையில் லண்டனில் இந்த விழா நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டும் அந்த மரபு தொடர்கிறது.
இதன் ஒரு பகுதியாக, லண்டனின் பிரசித்திபெற்ற ஹைட் பார்க் பகுதி முழுவதும் பல்வேறு விற்பனை கடைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ரோலர் கோஸ்டர் உள்ளிட்ட சாகச விளையாட்டுகளிலும், பல்வேறு சுழற்சி ராட்டினங்களிலும் பொதுமக்கள் பயணம் செய்து மகிழ்ச்சியை அனுபவித்து வருகின்றனர்.
எங்கும் விழாக்கோலத்தை வெளிப்படுத்தும் வகையில் பிரகாசமான அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டு, இரவு நேரத்தை பகலாக மாற்றியமைத்துள்ளன. விழாவிற்கு வரும் மக்கள் இசைக்கு தாளமிட்டு ஆடிப் பாடி, மகிழ்ச்சியுடன் நேரத்தை கழித்து வருகின்றனர்.