இந்தியாவுக்கு எதிரான சதியில் ஈடுபடுவோருடன் ராகுல் காந்தி தொடர்பு – பாஜக குற்றச்சாட்டு
நாட்டின் நலன்களுக்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் எதிராக செயல்படுபவர்களுடன் ராகுல் காந்தி தொடர்பு கொண்டு, இந்தியாவுக்கு எதிரான சதிகளில் ஈடுபடுவதாக பாஜக செய்தித் தொடர்பாளரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கவுரவ் பாட்டியா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் ராகுல் காந்தி பங்கேற்காத நிலையில், அவர் வெளிநாடு சென்றிருந்ததை சுட்டிக்காட்டிய கவுரவ் பாட்டியா, “ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கு நாடாளுமன்றத்தை விட ஜெர்மனி செல்வது எவ்வளவு முக்கியமானது?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், ஜெர்மனியில் பேராசிரியர் கார்னேலியா வோல் என்பவரை ராகுல் காந்தி சந்தித்தது குறித்து சந்தேகம் தெரிவித்த அவர், இந்தியாவுக்கு விரோதமாக செயல்படும், நாட்டின் வளர்ச்சியையும் ஒற்றுமையையும் விரும்பாத நபர்களுடனே ராகுல் காந்தி அடிக்கடி தொடர்பு வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.