கர்நாடகா : 75 அடி உயர பிரமாண்ட கிறிஸ்துமஸ் மரம்
கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு, ஒரு வணிக வளாகத்தில் 75 அடி உயரம் கொண்ட பிரமாண்ட கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் தினம் நெருங்கி வருவதால், பெங்களூரு நகரம் முழுவதும் பண்டிகை உற்சாகத்தில் மிளிர்கிறது.
இதன் ஒரு பகுதியாக, ஹெப்பல் பகுதியில் அமைந்துள்ள ‘மால் ஆஃப் ஆசியா’ வளாகம் முழுவதும் சிறப்பு அலங்காரங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளது.
அந்த மாலில் நிறுவப்பட்டுள்ள 75 அடி உயரமுள்ள கிறிஸ்துமஸ் மரம், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.