ராமேஸ்வரம்: டிக்கெட் இன்றி ரயிலில் வந்த யாத்ரீகர்கள் கோஷமிட்டு தப்பிய சம்பவம்
வட மாநிலங்களில் இருந்து ரயிலில் பயணச்சீட்டு எடுக்காமல் ராமேஸ்வரம் வந்த யாத்ரீகர்கள், அதிகாரிகளை ஏமாற்றி கோஷமிட்டபடி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்திலிருந்து மதுரை வரை ரயிலில் பயணித்த 400-க்கும் அதிகமான யாத்ரீகர்கள், பின்னர் மதுரையிலிருந்து பயணிகள் ரயிலில் ராமேஸ்வரத்தை சென்றடைந்தனர்.
அவர்களில் சுமார் 100 பேரிடம் மட்டுமே செல்லுபடியாகும் பயணச்சீட்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. டிக்கெட் இல்லாமல் பயணித்த சிலரிடம் ரயில்வே அதிகாரிகள் அபராதம் வசூலித்தனர்.
ஆனால், மீதமுள்ள யாத்ரீகர்கள் அபராதம் செலுத்த மறுத்து, “சத்ரபதி சிவாஜி சிந்தாபாத்”, “ஜெய் ஹோ” என முழக்கமிட்டபடி அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது