தருமபுரி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு – 6.34% வாக்காளர்கள் நீக்கம்
தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, புதிய வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான சதீஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
இந்த வரைவு பட்டியல், தருமபுரி மாவட்டத்திற்குட்பட்ட பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.
சீரமைப்பு பணிகளின் முடிவில், தருமபுரி மாவட்டத்தில் மொத்தமாக 12 லட்சத்து 3 ஆயிரத்து 917 பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சிறப்பு திருத்த நடவடிக்கையின் போது, மொத்த வாக்காளர்களில் 6.34 சதவீதம் பேர் பல்வேறு காரணங்களால் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.