உணவகத்தில் பரிமாறப்பட்ட தயிர் வடையில் செத்த எலி – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
உத்தரப் பிரதேசத்தின் காஜிப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு உணவகத்தில், வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட தயிர் வடையில் செத்த எலி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஜிப்பூர் நெடுஞ்சாலையோரத்தில் அமைந்துள்ள ‘சாம்ராட் தாபா’ என்ற உணவகத்தில், உணவருந்த வந்த ஒருவர் தயிர் வடை வாங்கி உள்ளார். அந்த உணவை பரிமாறியபோது, தயிர் வடைக்குள் எலி ஒன்று உயிரற்ற நிலையில் இருந்ததை கண்டு அவர் அதிர்ந்து போனார்.
இந்தக் காட்சியை பார்த்த அவர் உடனடியாக அங்கு இருந்த மற்ற வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து பலர் தங்கள் கைபேசிகளில் அந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.
இந்த நிகழ்வு உணவகத்தின் சுத்தம் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்து கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது.