பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டனில் முதல் சுற்றிலேயே லக்ஷயா சென் தோல்வி
பாரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் தொடரில், இந்திய வீரர் லக்ஷயா சென் முதல் சுற்றிலேயே வெளியேற்றம் காண்ந்தார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் 16வது இடத்தில் உள்ள லக்ஷயா சென், 29வது இடத்தில் உள்ள அயர்லாந்து வீரர் நாட் நுயென் எதிராக களம் இறங்கினார்.
போட்டியில் ஆரம்பத்திலேயே நுயென் ஆட்டத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தினார். இதனால் லக்ஷயா சென் எதிர்பாராத முறையில் 7-21, 16-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
குறிப்பாக, கடந்த வாரம் டென்மார்க் ஓபன் போட்டியில் இதே நுயெனை வீழ்த்தியிருந்த லக்ஷயா, இம்முறை முதல் சுற்றிலேயே அவரிடம் தோல்வியடைந்தது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.