ஸ்ரீலீலாவுக்கு இணையாக நடனமாட அனுமதி கிடைக்கவில்லை – சிவகார்த்திகேயன் நகைச்சுவை
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பராசக்தி திரைப்படத்தின் கண்காட்சி நடைபெறுவது தனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருப்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
பராசக்தி படத்தின் கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்ட அவர், இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் உருவாகியுள்ளதாகக் கூறினார்.
மேலும் படத்தில் நடிகை ஸ்ரீலீலாவைப் போல அதிகமாக நடனமாடும் வாய்ப்பை நடன அமைப்பாளர் தன்னிடம் வழங்கவில்லை என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய நடிகை ஸ்ரீலீலா, 1960-களில் தான் வாழ்ந்திருந்தால், படத்தில் வரும் ரத்தினமாலா கதாபாத்திரத்தைப் போலவே வாழ்க்கையை அமைத்திருப்பேன் எனத் தெரிவித்தார்.
அதன்பின்னர் உரையாற்றிய நடிகர் ரவி மோகன், சிவகார்த்திகேயனின் 25-ஆவது திரைப்படத்தில் இணைந்து நடிப்பது தனக்கு பெரும் மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். மேலும், பராசக்தி படத்திற்காக அமைக்கப்பட்ட கண்காட்சி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.