கிரிப்டோ சந்தை சரிவு அதிர்ச்சி: 19 பில்லியன் டாலர் இழப்பில் வர்த்தகர் தற்கொலை
உக்ரைனைச் சேர்ந்த பிரபல கிரிப்டோகரன்சி வர்த்தகர் கோஸ்ட்யா குடோ (Kostya Guto) மரணமடைந்த சம்பவம் சர்வதேச அளவில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 11ஆம் தேதி அவர் தனது லம்போர்கினி உருஸ் காரில், தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் உயிரிழந்தார். இது தற்கொலை எனப் பரவலாக சந்தேகிக்கப்படுகிறது, எனினும் காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
குடோ மரணத்திற்கு முன், நிதிச் சிக்கல்களால் மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிப்பதாக அறிவித்தது, உலகளாவிய கிரிப்டோ சந்தையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வரி அறிவிப்பின் விளைவாக, பிட்காயின் உள்ளிட்ட முக்கிய கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு 8 சதவீதம் வரை சரிந்தது. இதன் தாக்கத்தில், குடோவுக்கு சுமார் 19 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப் பெரும் நஷ்டமே, அவரது தற்கொலையின் முக்கிய காரணமாக இருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.