இந்தியா தனிப்பட்ட விண்வெளி நிலையம் அமைக்கும் – பிரதமர் மோடி அறிவிப்பு
இந்தியா விரைவில் தனது சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கும் என்ற உறுதியை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ஓமன் சென்ற பிரதமர், தலைநகர் மஸ்கட்டில் வாழும் இந்திய வம்சாவளியினரை சந்தித்து உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், தீபாவளி பண்டிகையை உலகின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இணைத்ததன் மூலம், இந்திய பண்பாட்டிற்கு யுனெஸ்கோ உலகளாவிய அங்கீகாரம் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்தியா மற்றும் ஓமன் நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக உறுதியான நட்பு நிலவி வருவதாக தெரிவித்த பிரதமர் மோடி, ஓமன் நாட்டின் விண்வெளி தொடர்பான இலக்குகளுக்கு இந்தியா முழுமையான ஆதரவு வழங்கும் என்றும் கூறினார்.
மேலும், இந்தியாவின் சார்பில் எதிர்காலத்தில் மிக விரைவாக ஒரு விண்வெளி நிலையம் அமைக்கப்படும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.