முஸ்லிம் உலகின் நம்பிக்கையை இழக்கும் பாகிஸ்தான் – அசிம் முனீரின் அரசியல் சூழ்ச்சி

Date:

முஸ்லிம் உலகின் நம்பிக்கையை இழக்கும் பாகிஸ்தான் – அசிம் முனீரின் அரசியல் சூழ்ச்சி

காசா பகுதியில் அமைக்கப்படவுள்ள சர்வதேச அமைதிப் படையில் பாகிஸ்தான் தனது இராணுவ வீரர்களை இணைக்கத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள், அந்த நாட்டில் பெரும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. பாகிஸ்தான் இராணுவத் தலைவர் அசிம் முனீரின் இந்த முடிவு, உள்நாட்டில் கடும் எதிர்ப்பையும் விமர்சனங்களையும் தூண்டியுள்ளது. இதன் பின்னணி குறித்து விரிவாக இந்தச் செய்தி தொகுப்பில் காணலாம்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே பல ஆண்டுகளாக நீடித்துவந்த போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 20 அம்சங்களைக் கொண்ட அமைதி திட்டத்தை முன்வைத்தார். அதன் விளைவாக, காசா பகுதியில் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமைதியை நிலைநாட்ட சர்வதேச நாடுகள் இணைந்த அமைதிப் படை காசாவில் பணியமர்த்தப்பட உள்ளது.

அமெரிக்காவின் இந்தத் திட்டத்தின்படி, பல்வேறு நாடுகளின் படைகள் இணைந்து காசாவில் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்க உள்ளன. ஆனால், ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இருக்கும் பல இஸ்லாமிய நாடுகள், இந்த சர்வதேச அமைதிப் படையை கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்தப் படையின் நோக்கம் ஹமாஸ் அமைப்பை முழுமையாக ஒழிப்பதே என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த சூழலில், எகிப்தில் நடைபெற்ற சந்திப்புகளில் பாகிஸ்தான் இராணுவத் தலைவர் மற்றும் பீல்ட் மார்ஷல் அசிம் முனீர், அமெரிக்க மற்றும் இஸ்ரேல் உளவுத்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, காசாவுக்கான சர்வதேச படையில் பாகிஸ்தான் பங்கேற்கும் முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் நடைபெற்ற முஸ்லிம் தலைவர்கள் குழுவின் பேச்சுவார்த்தைக்கு பிறகு, பாகிஸ்தான் துணை பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார், காசாவுக்கு சுமார் 20,000 பாகிஸ்தான் வீரர்கள் அனுப்பப்படுவார்கள் என உறுதி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு வீரருக்கும் மாத சம்பளமாக சுமார் 8.86 லட்சம் ரூபாய் கோரப்பட்டதாகவும், ஆனால் இஸ்ரேல் தரப்பு 8,000 ரூபாய் மட்டுமே வழங்க முன்வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்பத்தில் ட்ரம்பின் காசா அமைதி திட்டத்திற்கு எதிராக இருந்த பாகிஸ்தான், பின்னர் அமெரிக்காவின் அழுத்தத்தால் திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதுவரை இஸ்ரேலை சுயாதீன நாடாக அங்கீகரிக்காத பாகிஸ்தான், இப்போது காசாவுக்கு தனது படைகளை அனுப்புவதன் மூலம் இஸ்ரேலுக்கு மறைமுக ஆதரவு வழங்குவதாக விமர்சிக்கப்படுகிறது.

ஈரான், துருக்கி, கத்தார் போன்ற ஹமாஸுக்கு ஆதரவளிக்கும் முக்கிய முஸ்லிம் நாடுகள், பாகிஸ்தானின் இந்த முடிவை தீவிரமாக எதிர்க்கும் நிலையில், இது இஸ்லாமிய உலகில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. இதை பலரும் “இஸ்லாமிய நாடுகளுக்கு எதிரான வெளிப்படை துரோகம்” எனக் கூறுகின்றனர். கடந்த சில வாரங்களாக இந்தோனேசியா, மலேசியா, சவுதி அரேபியா, துருக்கி, ஜோர்டான், எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகளின் அரசியல் மற்றும் ராணுவ தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்திய அசிம் முனீர், அடுத்த வாரம் அமெரிக்கா சென்று அதிபர் ட்ரம்பை சந்திக்க உள்ளார். கடந்த ஆறு மாதங்களில் அவர் அமெரிக்கா செல்லும் மூன்றாவது பயணம் இதுவாகும்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அரசியல் விளையாட்டில் பாகிஸ்தானை ஒரு கருவியாக மாற்றியுள்ளதாக கூறப்படும் அசிம் முனீருக்கு, நாட்டிற்குள் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான நிலைப்பாடு கொண்ட பாகிஸ்தானின் இஸ்லாமிய அரசியல் கட்சிகள், அசிம் முனீருக்கு எதிராக போராட்டங்களை தொடங்கியுள்ளன. இதற்கிடையே, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சிறைவாசமும், அதைத் தொடர்ந்து பிடிஐ கட்சியின் போராட்டங்களும் தொடர்கின்றன.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு முப்படைகளின் தலைவராக பதவி வகிக்க உள்ள அசிம் முனீர், தனது பீல்ட் மார்ஷல் பதவியை நிரந்தரமாக தக்கவைத்துக் கொள்ளும் அதிகாரத்தையும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், எந்தவொரு குற்றவியல் வழக்கிலிருந்தும் வாழ்நாள் முழுவதும் விலக்கு பெறும் வகையில் அரசியலமைப்பு பாதுகாப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், பாகிஸ்தான் இராணுவத்தை இஸ்லாமிய நலன்களின் காவலனாக முன்னிறுத்தும் அசிம் முனீர், அதே நேரத்தில் இஸ்ரேலுடன் இணைந்து காசா அமைதிப் படையில் பாகிஸ்தான் படையை இணைப்பது, அந்த நாட்டுக்கும் இஸ்லாமிய உலகிற்கும் மிகப்பெரிய அரசியல் அபாயத்தை உருவாக்கும் முடிவாகவே பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

2026 BRICS உச்சி மாநாட்டுக்கு இந்தியா தயாராகிறது – மோடியின் எத்தியோப்பியா பயணம் ஏற்படுத்திய திருப்பம்

2026 BRICS உச்சி மாநாட்டுக்கு இந்தியா தயாராகிறது – மோடியின் எத்தியோப்பியா...

ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்ட தவெக தலைவர் விஜய்

ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்ட தவெக தலைவர்...

மார்கழி வியாழனை முன்னிட்டு திருச்செந்தூரில் திரண்ட பக்தர்கள்

மார்கழி வியாழனை முன்னிட்டு திருச்செந்தூரில் திரண்ட பக்தர்கள் மார்கழி மாத வியாழக்கிழமையை ஒட்டி,...

மீண்டும் தன்னலப் புகழ்ச்சி – உண்மையற்ற கூற்றுகளை முன்வைக்கும் ட்ரம்ப்!

மீண்டும் தன்னலப் புகழ்ச்சி – உண்மையற்ற கூற்றுகளை முன்வைக்கும் ட்ரம்ப்! பதவியேற்ற பத்து...