சீன ஜிபிஎஸ் சாதனம் பொருத்தப்பட்ட சீகல் கடற்பறவை கண்டுபிடிப்பு – பாதுகாப்பு வட்டாரங்களில் பரபரப்பு
கர்நாடக மாநிலம் கார்வார் பகுதியில், சீனாவில் தயாரிக்கப்பட்ட ஜிபிஎஸ் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்ட சீகல் வகை கடற்பறவை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு இதே கார்வார் சுற்றுவட்டாரத்தில், ஜிபிஎஸ் டிரான்ஸ்மிட்டர் இணைக்கப்பட்ட ஒரு கழுகு பறவை கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்வைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடம்பா கடற்படை தளத்திற்கு அருகிலுள்ள பகுதியில், சீன ஜிபிஎஸ் டிராக்கர் இணைக்கப்பட்ட சீகல் பறவை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.