600 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை எட்டிய முதல் மனிதர் எலான் மஸ்க்
உலக அளவில் 600 பில்லியன் அமெரிக்க டாலரை மீறும் தனிநபர் சொத்து மதிப்பை அடைந்த முதல் நபராக தொழிலதிபர் எலான் மஸ்க் சாதனை படைத்துள்ளார்.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சுமார் 800 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படலாம் என்ற தகவல் வெளியாகியதைத் தொடர்ந்து, மஸ்கின் சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.
இதற்கு முன் கடந்த அக்டோபர் மாதத்தில், 500 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர சொத்து மதிப்பை கடந்த உலகின் முதல் நபர் என்ற பெருமையையும் எலான் மஸ்க் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.