இஸ்ரேல் சென்றடைந்தார் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அதிகாரப்பூர்வ அரசு பயணமாக இஸ்ரேல் நாட்டை சென்றடைந்துள்ளார்.
இந்தச் சுற்றுப்பயணத்தின் போது, இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சோக், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் கிடியோர் சார் ஆகியோரை சந்தித்து, இருநாடுகளுக்கிடையேயான முக்கிய அரசியல் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விரிவான ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விரைவில் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள சூழலில், மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் இஸ்ரேல் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.