பிரான்ஸ் : கால்நடைகளில் தோல் கட்டி நோய் தீவிரப் பரவல்
கால்நடைகளை பாதித்து வேகமாகப் பரவி வரும் தோல் கட்டி நோயை கட்டுப்படுத்தும் நோக்கில், 10 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.
பூச்சிகளின் மூலம் பரவும் வைரஸ் தொற்றுதான் இந்த தோல் கட்டி நோய். இது மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளின் உடலில் புண்கள் மற்றும் கட்டிகளை உருவாக்கி, பால் உற்பத்தியில் குறைவு ஏற்படுத்துவதோடு, விவசாயிகளுக்கு கடுமையான பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. இருப்பினும், இந்த நோய் மனிதர்களுக்கு தொற்றாது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.