முத்தரையர் நினைவு தபால் தலையை வெளியிட்ட குடியரசு துணை தலைவர்
மன்னர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரை நினைவுகூரும் வகையில் வெளியிடப்பட்ட தபால் தலையை குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.
டெல்லியில் அமைந்துள்ள குடியரசு துணைத் தலைவர் இல்லத்தில், மன்னர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு தபால் தலை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், நினைவு தபால் தலையை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தார்.
இவ்விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.