சபரிமலையில் திரண்ட பெருந்திரளான ஐயப்ப பக்தர்கள்!
வார இறுதி விடுமுறையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் திருக்கோயிலில் பக்தர்கள் பெருமளவில் திரண்டு வந்து தரிசனம் செய்ததால், அப்பகுதி முழுவதும் பக்தர்களின் பெருக்கம் காணப்பட்டது.
மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு கடந்த நவம்பர் 16ஆம் தேதி ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. அதன் பின்னர் தினமும் 90 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், வார விடுமுறை காரணமாக கூட்டம் மேலும் அதிகரித்து, கோயில் வளாகம் முழுவதும் பக்தர்களால் நிரம்பியது.
பக்தர்கள் இடையே ஏற்படும் நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு மற்றும் ஒழுங்குப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அதிகாலை 3 மணி வரை 18-ஆம் படி வழியாக பக்தர்களை அனுமதிப்பதன் மூலம், கூட்டம் சீராக நிர்வகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.