பயிற்சி விமானிகளை உருவாக்கும் பொறுப்பில் ரபேல் விமானி ஷிவாங்கி சிங்
இந்திய விமானப் படையின் ரபேல் போர் விமானியைச் சேர்ந்த ஷிவாங்கி சிங், புதிய விமானிகளைப் பயிற்றுவிக்கும் பணிக்காக விமானப்படை பயிற்சி நிறுவனத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரபேல் போர் விமானத்தை இயக்கிய முதல் பெண் விமானி என்ற சிறப்பை பெற்றுள்ள ஷிவாங்கி சிங், தற்போது ரபேல் விமானங்களைச் செயல்படுத்தி வரும் அனுபவமிக்க விமானியாக உள்ளார். இதற்கு முன்பு அவர் மிக்–21 போர் விமானங்களையும் இயக்கியுள்ளார்.
இந்திய விமானப்படையில் பல்வேறு கடினமான மற்றும் முக்கியமான பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றிய அனுபவம் கொண்டவராக ஷிவாங்கி சிங் அறியப்படுகிறார்.
இந்த நிலையில், தனது அனுபவத்தை அடுத்த தலைமுறை விமானிகளுக்கு வழங்கும் வகையில், பயிற்சி விமானிகளை உருவாக்கும் பொறுப்புடன் இந்திய விமானப்படை பயிற்சி நிறுவனத்தில் அவர் தற்போது பணியாற்றி வருகிறார்.