வங்கதேச அரசியல் நிலைமை: தொடரும் குழப்பம் – மீளுமா ராணுவ ஆட்சி?

Date:

வங்கதேச அரசியல் நிலைமை: தொடரும் குழப்பம் – மீளுமா ராணுவ ஆட்சி?

அரசியல் நிலைத்தன்மையும் ஜனநாயகத் தெளிவும் இன்றி வங்கதேசம் ஒரு உறுதியற்ற பாதையில் பயணிக்கிறது என்ற விமர்சனங்கள் வலுப்பெற்று வருகின்றன. முகமது யூனுஸ் தலைமையில் அமைந்த இடைக்கால அரசால் உருவான அரசியல் குழப்பங்கள், அந்நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றியுள்ளன. தற்போதைய சூழலை விளக்கும் செய்தி தொகுப்பு இதுவாகும்.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், வேலைவாய்ப்பு ஒதுக்கீடு தொடர்பாக வங்கதேச மாணவர்கள் தொடங்கிய போராட்டம், விரைவில் அரசுக்கு எதிரான பெரும் எழுச்சியாக மாறியது. நாட்டின் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் பரவலாக நடைபெற்றன. அந்தச் சூழலில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் கொண்டிருந்த வங்கதேச இராணுவம், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு சக்திகளின் அழுத்தம் காரணமாக நடுநிலை நிலைப்பாட்டை எடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த நிலைமையின் தொடர்ச்சியாக, பிரதமர் பதவியை விட்டு விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார். அதன்பின்னர், முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே, அரசியலமைப்பு, தேர்தல் நடைமுறைகள் மற்றும் நிர்வாக அமைப்புகளில் அடிப்படை மாற்றங்களை கொண்டுவர முடிவு செய்தது இந்த அரசு.

இதற்காக ஒரு விரிவான திருத்த வரைவு தயாரிக்கப்பட்டது. அந்தத் திட்டம், ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசின் அரசியல் அமைப்புகளை முழுமையாக நிராகரிக்கும் வகையில் இருந்ததாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே, வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், கடந்த 15 ஆண்டுகால ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாகக் கூறி, கடந்த நவம்பர் 17ஆம் தேதி ஷேக் ஹசீனாவை குற்றவாளி என அறிவித்தது. அவருக்கு மரண தண்டனையும், ஊழல் குற்றச்சாட்டில் 21 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், முகமது யூனுஸ் அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகளின் ஆதிக்கத்தில் செயல்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைப் பயன்படுத்திக் கொண்டு பாகிஸ்தானும் சீனாவும் தங்களது புவியியல் அரசியல் நலன்களை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

சீனா, ஏற்கனவே தனது Belt and Road திட்டத்தின் கீழ் சுமார் 26 பில்லியன் அமெரிக்க டாலரும், வங்கதேசத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக 14 பில்லியன் டாலரும் முதலீடு செய்துள்ளது. அதேபோல், பாகிஸ்தானின் ராணுவ உயர் அதிகாரிகள் வங்கதேசத்திற்கு அடிக்கடி வருகை தருகின்றனர். வங்கதேச விமானப்படை வீரர்களுக்கு பாகிஸ்தானில் போர் விமானப் பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் கடற்படையின் சைஃப் கப்பல், நல்லெண்ணப் பயணமாக சிட்டகாங்க் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கதேச இராணுவம் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவான அணுகுமுறையை எடுத்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இதற்கிடையே, நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், கடன் சுமை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பொதுத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தற்போதைய இடைக்கால அரசு தன்னை அவமதித்ததாகவும், ஓரங்கட்டியதாகவும் குற்றம்சாட்டியுள்ள அதிபர் முகமது ஷஹாபுதீன், பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

முன்னதாக, முகமது யூனுஸ் அரசு, ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியைத் தடை செய்து, அதன் முக்கிய தலைவர்களைச் சிறையில் அடைத்தது. அதேசமயம், மற்றொரு முக்கிய அரசியல் சக்தியான வங்கதேச தேசியவாதக் கட்சி, அதன் தலைவர் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் உடல்நலக் குறைவு காரணமாக அரசியல் செயல்பாடுகளில் பலவீனமடைந்துள்ளது.

தேர்தல் நடைபெற்றாலும், ஜமாத்–இ–இஸ்லாமி எனப்படும் அடிப்படைவாத இஸ்லாமிய கட்சிக்கு முகமது யூனுஸ் ஒருதலைப்பட்சமாக ஆதரவு வழங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்தச் சூழலில்,

வங்கதேசம் ஜனநாயகப் பாதையில் தொடருமா?

மீண்டும் ராணுவ ஆட்சி உருவாகுமா?

அல்லது தீவிரவாத சக்திகளின் கட்டுப்பாட்டுக்குள் சிக்குமா?

என்ற கேள்விகள் பொதுமக்களிடமும் சர்வதேச அரசியல் வட்டாரங்களிலும் தீவிரமாக எழுந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கேரள அரசியலில் ஒரு திருப்புமுனையான தருணம்… பிரதமர் மோடி புகழாரம்

திருவனந்தபுரம்: கேரள தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சி தொடர்பாக, பா.ஜ.க. தலைமையிலான தேசிய...

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி – மின்சார வாரிய பெண் திமுக அதிகாரி மீது புகார்

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி – மின்சார...

துரந்தர் திரைப்படத்திற்கு மேற்காசிய நாடுகளில் தடை – 6 நாடுகள் வெளியீட்டை மறுப்பு

துரந்தர் திரைப்படத்திற்கு மேற்காசிய நாடுகளில் தடை – 6 நாடுகள் வெளியீட்டை...

ட்ரம்ப் வரி உத்தரவுக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் – இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 50% வரியை நீக்க கோரிக்கை

ட்ரம்ப் வரி உத்தரவுக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் – இந்தியாவுக்கு...