நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் முயற்சிக்கு நீதித்துறையிலிருந்து கடும் எதிர்ப்பு
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் மீதான பதவி நீக்க நடவடிக்கை தொடுக்கப்பட்டிருப்பதை உச்ச நீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் சேர்ந்த பல நீதிபதிகள் தீவிரமாக எதிர்த்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில்,
சில அரசியல் நம்பிக்கைகள் மற்றும் குறிப்பிட்ட கருத்தியல் நிலைப்பாடுகளுக்கு இணங்காத நீதிபதிகளை அச்சுறுத்தும் வகையில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சாடப்பட்டுள்ளது.
தங்களுக்கு ஏற்றபடியாக தீர்ப்புகள் வராதபோது, நீதித்துறையை அவமதித்து அழுத்தம் கொடுக்க முயலும் நிகழ்வுகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.
நீதிபதிகளை அரசியல் கோரிக்கைகளுக்கு உட்படுத்துவதற்காக பதவி நீக்கம் போன்ற கருவிகளைப் பயன்படுத்துவது, இந்திய அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகளை மீறுவது மட்டுமல்லாது, ஜனநாயக விரோதமாகவும் விளங்குகிறது என அறிக்கை வலியுறுத்துகிறது.
நீதிபதி சுவாமிநாதனின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள பதவி நீக்க முயற்சி, நீதித்துறையின் சுயாதீனத்திற்கும் மரியாதைக்கும் நேரடியான தாக்குதலாகும் என்றும்,
நீதிபதிகள் தங்கள் பதவியேற்பு சத்தியத்திற்கும் இந்திய அரசியலமைப்பிற்கும் மட்டும் பொறுப்பானவர்கள் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், நீதிபதிகள் எந்த அரசியல் அழுத்தத்திற்கும் அல்லது கருத்தியல் அச்சுறுத்தலுக்கும் உட்பட்டவர்கள் அல்ல;
சட்டத்தின் ஆட்சிப்படி வழங்கப்படும் தீர்ப்புகளுக்கு எதிராக தொடர வேண்டியது மேல்முறையீடுகள் மட்டுமே —
அரசியல் மனப்பான்மைக்கேற்ப பதவி நீக்க அச்சுறுத்தல்கள் விடுவது ஒழுங்கற்றதும் ஏற்க முடியாததும் என அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.