‘அயலான்’ இயக்குநர் ரவிக்குமார் அடுத்த படத்தில் சூரி நாயகன்!
‘அயலான்’ திரைப்படத்தின் இயக்குநர் ஆர். ரவிக்குமார் தனது அடுத்த படத்தை நடிகர் சூரியை முன்னணி கதாபாத்திரத்தில் வைத்து இயக்கவுள்ளார்.
முதலில், ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த திட்டம் பின்னர் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, விஜய் சேதுபதியை நாயகனாகக் கொண்டு படம் எடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இறுதியில், சூரி இந்த படத்தின் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சூரி–ரவிக்குமார் கூட்டணியில் உருவாகும் இந்த புதிய படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது ‘மண்டாடி’ படத்தின் பணிகளில் ஈடுபட்டு வரும் சூரி, அதனை முடித்தவுடன் ரவிக்குமார் இயக்கப் படத்திற்கான தேதிகளை ஒதுக்கவுள்ளார்.
இப்படத்தின் தயாரிப்பாளர் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. பல தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. சூரியின் தேதிகள் உறுதியானதும், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.