காசா அமைதி குழுவில் இந்தியா இணைவதில் தயக்கம் ஏன்? – சர்வதேச அரசியல் பின்னணி

Date:

காசா அமைதி குழுவில் இந்தியா இணைவதில் தயக்கம் ஏன்? – சர்வதேச அரசியல் பின்னணி

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த காசா அமைதி முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச அமைதி குழுவில் பாகிஸ்தான் இணைந்துள்ள நிலையில், இந்தியா இதுவரை எந்தத் தீர்மானத்தையும் அறிவிக்காமல் காத்திருப்பது கவனம் ஈர்த்துள்ளது. நட்பு நாடுகள் எடுக்கும் நிலைப்பாட்டை கவனித்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், காசா பகுதியின் மறுசீரமைப்பு மற்றும் நிர்வாகத்தை ஒருங்கிணைக்க ட்ரம்ப் தலைமையில் இந்த அமைதி குழு உருவாக்கப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட காசா நகரின் மீட்பு, பாதுகாப்பு மற்றும் நிர்வாக கட்டமைப்புகளை கண்காணிப்பதே இந்த குழுவின் பிரதான நோக்கம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த அமைதி குழு, ஒரு புதிய சர்வதேச அமைப்பாக செயல்படும் என்றும், இதில் உலகம் முழுவதிலிருந்து 60க்கும் மேற்பட்ட நாடுகளை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், மூன்று ஆண்டுகள் கடந்த பிறகும் உறுப்பினராக தொடர விரும்பும் நாடுகள், ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்) கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விதிமுறையும் வகுக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் சேருமாறு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், வியட்நாம், கஜகஸ்தான், ஹங்கேரி, மொராக்கோ, அர்ஜென்டினா, பாகிஸ்தான் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் இதுவரை இணைந்துள்ளன.

பிரதமர் நரேந்திர மோடிக்கும் ட்ரம்ப் நேரடியாக அழைப்பு விடுத்திருந்த போதிலும், பாகிஸ்தான் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள இந்த அமைப்பில் சேர்வது குறித்து இந்தியா இன்னும் அதிகாரப்பூர்வ முடிவை அறிவிக்கவில்லை. இதற்கு முன், கடந்த அக்டோபர் மாதம் எகிப்தில் நடைபெற்ற காசா அமைதி மாநாட்டிலும் பிரதமர் மோடி நேரில் பங்கேற்காமல், மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்கை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட முக்கிய நாடுகளும் இந்த அமைதி குழுவில் இணைவது தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும், அமெரிக்காவைத் தவிர ஜி7 கூட்டமைப்பைச் சேர்ந்த எந்த நாடும் இந்த முயற்சியில் பங்கேற்காததும் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

ஐநா போன்ற சர்வதேச அமைப்புகளின் அதிகாரத்தை குறைக்கும் முயற்சியாக இந்த அமைதி குழுவை சில நாடுகள் பார்க்கும் நிலையில், காசா தொடர்பான தெளிவான குறிப்புகள் கூட இந்த குழுவின் சாசனத்தில் இடம்பெறாதது விமர்சனங்களை அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கஞ்சா கடத்தல் மையமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசு – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

கஞ்சா கடத்தல் மையமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசு – டிடிவி...

காசா அமைதி வாரியத்தில் 22 நாடுகள் டிரம்ப் முன்னிலையில் சேர சம்மதம்

காசா அமைதி வாரியத்தில் 22 நாடுகள் டிரம்ப் முன்னிலையில் சேர சம்மதம் போரால்...

நாள் முழுவதும் குடியரசு தினம் கொண்டாட்டம் – மெரினா கடற்கரையில் தேசிய கொடியேற்றும் ஆளுநர் R.N. ரவி

நாள் முழுவதும் குடியரசு தினம் கொண்டாட்டம் – மெரினா கடற்கரையில் தேசிய...

28-ம் தேதி தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

28-ம் தேதி தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மத்திய...