தென்காசி பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்
தென்காசி மாவட்டத்தில் உள்ள பண்பொழி திருமலைக் குமாரசுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச திருவிழா, பாரம்பரிய முறையில் கொடியேற்ற நிகழ்வுடன் தொடங்கியது.
இந்த தைப்பூச விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் வரும் 31ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தைப்பூச பெருவிழா பிப்ரவரி 1ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
திருவிழா தொடக்கமாக, கோயிலில் சுமார் 100 அடி உயரமுள்ள கொடிமரத்தில், வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகளுடன் அன்னக்கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு “அரோகரா” என முழங்கியபடி சுவாமி தரிசனம் செய்தனர்.