நகைக்கடையில் புகுந்த மர்ம கும்பல் – இரு உரிமையாளர்கள் சுட்டுக் கொலை, நகைகள் கொள்ளை
சிரியாவில் உள்ள ஒரு நகைக்கடையில் உரிமையாளர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் சமீபத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து, எல்-ஜூலானி தலைமையில் புதிய நிர்வாகம் அமைந்துள்ளது. இந்நிலையில், அலெப்போ நகரில் ஆயுதம் ஏந்திய குழுக்களின் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வரிசையில், அலெப்போவில் செயல்பட்டு வந்த ஒரு நகைக்கடைக்குள் திடீரென புகுந்த இரண்டு மர்ம நபர்கள், கடையின் உரிமையாளர்களாக இருந்த சகோதரர்கள் இருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
பின்னர், கடையில் இருந்த நகைகளை கொள்ளையடித்து அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.