தமிழக அரசுடன் ஷ்னைடர் எலெக்ட்ரிக் ரூ.718 கோடி முதலீட்டு ஒப்பந்தம்
தமிழக அரசும், உலகப் புகழ்பெற்ற ஷ்னைடர் எலெக்ட்ரிக் நிறுவனமும் ரூ.718 கோடி மதிப்பிலான முதலீட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஷ்னைடர் எலெக்ட்ரிக் நிறுவனம், மாநிலத்தில் தனது தொழில் செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், சென்னை மற்றும் கோவை நகரங்களில் இயங்கி வரும் ஷ்னைடர் எலெக்ட்ரிக் உற்பத்தி ஆலைகள் விரிவாக்கம் செய்யப்படவுள்ளன. அதேபோல், ஒசூரில் மின்கலன் தயாரிப்பு மற்றும் குளிர்சாதன தொழில்நுட்ப தீர்வுகளுக்கான புதிய உற்பத்தி நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மொத்தம் ரூ.718 கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள இந்தத் திட்டத்தின் மூலம், 663 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.