ஜப்பானை குறிவைக்கும் பொருளாதார அழுத்தம் – சீனாவின் எச்சரிக்கை நடவடிக்கை
தைவானுக்கு ஆதரவாக வெளியான கருத்துகளின் காரணமாக, ஜப்பான் மீது சீன அரசு பொருளாதார ரீதியான அழுத்தங்களை உருவாக்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்காசியப் பகுதியாக உள்ள தைவானை தன்னுடைய பிரதேசமாக சீனா தொடர்ந்து உரிமை கோரி வருகிறது. இந்நிலையில், தைவானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, விமான சேவைகளை ரத்து செய்வது, சீன சுற்றுலாப் பயணிகள் ஜப்பானுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருவதால், இரு நாடுகளுக்கிடையேயான உறவில் பதற்றம் அதிகரித்து வருகிறது.