இரைப்பை, குடல், கல்லீரல் நோய்களுக்கு ஒருங்கிணைந்த சிகிச்சை மையம் தொடக்கம்
சென்னையின் வடபழனியில், இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு ஒரே இடத்தில் முழுமையான சிகிச்சை வழங்கும் புதிய சிறப்பு மருத்துவ மையத்தை காவேரி மருத்துவமனை நிறுவியுள்ளது.
நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 70 சதவீதம் பேர் ஏதாவது ஒரு வகையான செரிமான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையை கருத்தில் கொண்டு, வடபழனியில் அமைந்துள்ள தனியார் வளாகத்தில், காவேரி மருத்துவமனை சார்பில் ‘காவேரி இன்ஸ்டிடியூட் ஆஃப் டைஜஸ்டிவ் சயின்சஸ்’ என்ற பெயரில் பிரத்யேக செரிமான நோய் சிகிச்சை மையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ மையத்தில், இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு நவீன மருத்துவ சிகிச்சைகளுடன் சேர்த்து, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் நோய் தடுப்பு குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.
மேலும், இந்த மையத்தில் அனுபவம் மிக்க இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவர்கள், எண்டோஸ்கோபி நிபுணர்கள் மற்றும் செரிமான நலத்துக்கான சிறப்பு மருத்துவக் குழு இணைந்து நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.