நாட்டில் வேலையின்மை விகிதம் சரிவு – மத்திய அரசு அறிவிப்பு
கிராமப்பகுதிகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்ததும், பெண்கள் பணிச் சந்தையில் அதிகமாக இணைந்ததும் காரணமாக, நாட்டின் வேலையின்மை விகிதம் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்டமிடல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் நவம்பர் மாதத்தில் வேலையின்மை விகிதம் 4.7 சதவீதமாக பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஏழு மாதங்களில் இது மிகக் குறைந்த அளவாகும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய அக்டோபர் மாதத்தில் வேலையின்மை விகிதம் 5.2 சதவீதமாக இருந்ததாகவும் அமைச்சகம் விளக்கியுள்ளது. வேலைவாய்ப்பு தேடி நகரங்களுக்கு இடம்பெயர்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவருவதால், கிராமப்புறங்களில் வேலைஇல்லா நிலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு வளர்ச்சி மற்றும் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் உயர்ந்து வருவதால், நாட்டின் தொழிலாளர் சந்தை மெல்ல மெல்ல வலுவடைந்து வருவதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.