இஸ்ரேல் பிரதமரை சந்தித்த ஜெய்சங்கர் – முக்கிய விவகாரங்களில் பேச்சுவார்த்தை
இந்தியாவின் வெளிநாட்டுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது, இந்தியா–இஸ்ரேல் இடையிலான இருதரப்பு உறவுகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இரு தரப்பும் விரிவாக விவாதித்தனர்.
இதற்கிடையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாகவும், அந்தப் பயணத்தின் போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.