சூடானில் ட்ரோன் தாக்குதல் : வங்கதேச வீரர்கள் உயிரிழப்பு – ஐ.நா. பொதுச்செயலாளர் கண்டனம்
சூடானில் நடைபெற்ற ட்ரோன் தாக்குதலில் 6 வங்கதேச வீரர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்த வங்கதேச வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
மேலும், இத்தகைய தாக்குதல்கள் எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாதவை என்றும், தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவில் முழுமையாக குணமடைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.