காஷ்மீரில் கடும் குளிர் : மைனஸ் டிகிரிக்கு வீழ்ந்த வெப்பநிலை
ஜம்மு–காஷ்மீர் மாநிலத்தின் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கும் கீழ் சென்றதால், நீர்நிலைகள் மற்றும் ஓடைகள் பனியாக உறைந்து காணப்படுகின்றன.
பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் நிலையை எட்டியுள்ளதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் உள்ளனர். குறிப்பாக, தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் உயரமான பகுதிகளில் குளிர் தாக்கம் மிகக் கடுமையாகப் பதிவாகியுள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள ஆறுகள், குளங்கள் மற்றும் குடிநீர் விநியோக குழாய்களில் நீர் உறைநிலைக்கு சென்றதால், அன்றாட தேவைகளில் மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களிலும் இந்தக் கடும் குளிர் தொடரும் என வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.