தேசிய எரிசக்தி சேமிப்பு விருதுகளை வழங்கிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
டெல்லியில் நடைபெற்ற 2025-ஆம் ஆண்டுக்கான தேசிய எரிசக்தி சேமிப்பு விருது விழாவில், வெற்றி பெற்றவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 14-ஆம் தேதி தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, எரிசக்தி சேமிப்பில் சிறந்து விளங்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விழாவில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர், எரிசக்தி சேமிப்புக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை பாராட்டி, வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.