சீரியல் நடிகை ராஜேஸ்வரி மரணம் — குடும்ப பிரச்சனை காரணமா?
சென்னையில் குடும்ப தகராறைத் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் தொலைக்காட்சி நடிகை ராஜேஸ்வரி உயிரிழந்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சிறகடிக்க ஆசை மற்றும் பாக்கியலட்சுமி போன்ற தொடர்களில் நடித்திருந்தவர் ராஜேஸ்வரி.
அவர் பிராட்வே பகுதியில் கணவருடன் வசித்து வந்தார்.
கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட விவகாரம் காரணமாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றிருந்தார்.
குடும்ப பிரச்சனையால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் அவர் உடல்நலக்குறைவு அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பெற்றுவந்தார்.
ஆனால், மருத்துவ சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.