ரஷ்யா–உக்ரைன் மோதல் தொடர்ந்தால் 3ஆம் உலகப் போர் தவிர்க்க முடியாத நிலை: டிரம்ப் எச்சரிக்கை
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரின் தீவிரம் மேலும் அதிகரித்தால், உலகம் மூன்றாவது உலகப் போரில் தள்ளப்படலாம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரஷ்யா–உக்ரைன் மோதலில் கடந்த ஒரே மாதத்திலேயே சுமார் 25 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.
சமாதான பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால் தான் மிகுந்த மனஉளைச்சலில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
உரையாடல்களில் முன்வைக்கப்பட்ட 20 முக்கிய கோரிக்கைகளில், குறிப்பாக நில ஒதுக்கீடு தொடர்பான பிரச்னைகளில் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை என ட்ரம்ப் குறிப்பிட்டார்.
உக்ரைனுக்கு அவர் கொடுக்கும் அழுத்தம் எதிர்மாறாகப் பாதிக்கும் என ஐரோப்பிய நாடுகள் கவலை தெரிவிக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலை தொடர்ந்தால், ரஷ்யா–உக்ரைன் போர் மிக விரைவில் 3ஆம் உலகப் போரைத் தூண்டும் ஆபத்தில் உள்ளது என எச்சரித்த ட்ரம்ப்,
போரைக் கைக் கட்டுப்படுத்தி உடனடியாக நிறுத்துவது உலக அமைதிக்காக அவசியம் என்று வலியுறுத்தினார்.