சென்னையில் 23வது சர்வதேச திரைப்பட விழாவுக்கு திரை திறப்பு!
சென்னையில் 23வது சர்வதேச திரைப்பட விழா அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
ராயப்பேட்டை சத்தியம் திரையரங்கில், INDO CINE APPRECIATION FOUNDATION மற்றும் தமிழக அரசின் ஆதரவுடன், 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் துவக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த தொடக்க நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் சாமிநாதன் மற்றும் நடிகை சிம்ரன் பங்கேற்று விழாவை தொடங்கி வைத்தனர். மேலும், கௌரவ விருந்தினராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.
வரும் டிசம்பர் 18ஆம் தேதி வரை தொடர்ந்து 8 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த சர்வதேச விழாவில், 51 நாடுகளைச் சேர்ந்த 122 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. குறிப்பாக ஆஸ்கார் மற்றும் கேன்ஸ் விருதுகளை பெற்ற பல படங்களும் இதில் இடம்பெறுகின்றன. ரஜினிகாந்தின் 50 ஆண்டு திரை பயணத்தை நினைவுகூரும் வகையில் ‘பாட்ஷா’ திரைப்படமும் இந்த விழாவில் திரையிடப்படுகிறது.