இம்ரான் கான் புதிய சிறைக்கு மாற்றப்படுகிறாரா?
தொடர்ச்சியாக வெடித்து வரும் போராட்டங்களை அடுத்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை வேறு சிறைக்கு மாற்றுவதற்கு பாகிஸ்தான் அரசு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஊழல் தொடர்பான பல வழக்குகளில் தண்டனை பெற்றுள்ள இம்ரான் கான் தற்போது ராவல்பிண்டியில் உள்ள அடியாலா மைய சிறையில் வைத்திருக்கப்படுகிறார்.
சமீப நாட்களில், அவர் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறி வதந்திகள் பரவியது. இதனால் அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், இம்ரான் கான் உயிருடன் இருப்பதைத் தனிப்பட்ட முறையில் பார்க்க அவரது சகோதரி சிறைக்கு சென்று உறுதிப்படுத்தினார்.
இதனிடையே, போராட்ட நிலைமை தொடரும் சூழலில், இம்ரான் கானை அடியாலா சிறையிலிருந்து பஞ்சாப் மாநிலத்தின் அட்டோக் மாவட்டத்தில் உள்ள சிறைக்கு மாற்றத் திட்டமிட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.