உலகக்கோப்பை ஸ்குவாஷ்: முதல் நாளில் இந்தியா – ஸ்விட்சர்லாந்து மோதல்!
சென்னையில் இன்று தொடங்கி 14ஆம் தேதி வரை உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டி நடைபெறுகிறது.
ராயப்பேட்டையில் நடந்த விழாவில், இந்தப் பிரபல கோப்பையை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டு அறிமுகப்படுத்தினார்.
இந்த சர்வதேச தொடரில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஜப்பான், மலேசியா, தென்கொரியா ஆகியவற்றை 12 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இந்திய அணிக்காக ஜோஷ்னா சின்னப்பா, வீர் சோத்ரானி, வேலவன் செந்தில்குமார், அனாஹத் சிங் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் களமிறங்குகின்றனர்.
இன்றைய தொடக்கநாளில், இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்து அணியை நேருக்கு நேர் முனையப் போகிறது.
ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலில் மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும் இந்தப் போட்டிகளை, ரசிகர்கள் இலவசமாக நேரடியாகப் பார்வையிடலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.