பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் இடையே மீண்டும் போர் வெடிக்கும் அபாயம்
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் கடந்த சில ஆண்டுகளாக எல்லைப் பிரதேசங்களில் இடையிடையே மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த மாதமும் இரு தரப்பினரிடையே துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்கள் நடந்தது.
அந்த மோதலுக்குப் பின்னர் கத்தாரில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையின் மூலம் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. எனினும், சமீபத்தில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற இரு நாடுகளுக்கிடையேயான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் சுமுக முடிவிற்கு வராமல் முடிவடைந்துள்ளன.
இதனால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே மீண்டும் ஆயுத மோதல் வெடிக்கும் அபாயம் நிலவுவதாக சர்வதேச வட்டாரங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன