தங்கம் விலை மீண்டும் உயர்வு – பவுனுக்கு ரூ.1,080 அதிகரிப்பு!
தங்கம் விலையில் மீண்டும் உயர்வு ஏற்பட்டுள்ளது. நேற்று (அக். 28) ஒரு பவுனுக்கு ரூ.89 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்த தங்க விலை, இன்று (அக். 29) மீண்டும் உயர்ந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.135 உயர்ந்து ரூ.11,210-க்கு, அதேபோல் ஒரு பவுன் ரூ.1,080 உயர்ந்து ரூ.89,680-க்கு விற்பனையாகிறது.
கடந்த சில வாரங்களாக தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வுகள் நீடித்து வருகின்றன. அக்டோபர் 17ஆம் தேதி தங்க விலை ரூ.97,600 என்ற வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. சில நாட்களில் ரூ.1 லட்சம் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலை திடீரென குறைந்து ரூ.96,000-க்கு சரிந்தது.
சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் தங்கம் வாங்குவதை தற்காலிகமாக குறைத்தது இதற்குக் காரணமாக கூறப்படுகிறது. எனினும், இப்போது மீண்டும் விலை உயர்வை நோக்கி நகர்கிறது.
இதனுடன், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.166-க்கும், ஒரு கிலோ ரூ.1,66,000-க்கும் விற்பனையாகிறது.