‘மா இண்டி பங்காரம்’ — பெண்களின் வலிமையை வெளிப்படுத்தும் கதை: சமந்தா
நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது புதிய தயாரிப்பு நிறுவனம் “ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ்” மூலம் திரைப்பட தயாரிப்பில் கால் பதித்துள்ளார். அந்த நிறுவனத்தின் முதல் படமாக ‘மா இண்டி பங்காரம்’ என்ற திரைப்படம் உருவாகிறது.
இதை நந்தினி ரெட்டி இயக்குகிறார். ‘ஓ! பேபி’ திரைப்படத்துக்குப் பிறகு மீண்டும் சமந்தா – நந்தினி ரெட்டி கூட்டணி இணைகிறது.
இந்தப் படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார். குல்ஷன் தேவைய்யா, திகாந்த், கவுதமி, மஞ்சுஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். ‘தி பேமிலி மேன்’ தொடரின் இயக்குநர்களில் ஒருவரான ராஜ், படத்துக்கு முதல் கிளாப் அடித்து தொடக்க விழாவை நடத்தி வைத்தார்.
சமந்தா, இதுகுறித்து கூறியதாவது:
“இந்தக் கதையை முதன்முறையாக கேட்டவுடனே அது என் மனதை நெருப்பாய் தொட்டது. ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து, அதே நேரத்தில் அதில் நடிப்பதும் ஒரு தனித்துவமான அனுபவம்.
‘மா இண்டி பங்காரம்’ என்பது காதல், உறவுகள், மற்றும் பெண்களின் உள்ளார்ந்த வலிமையை பேசும் கதை. நந்தினி ரெட்டியுடன் மீண்டும் பணிபுரிவதில் நான் பெருமை கொள்கிறேன்,” என சமந்தா தெரிவித்தார்.